Friday 23 May 2014

துபாய் மெட்ரோ!

 


துபாயோட முக்கியமான இடம் எல்லாத்தையும் இணைக்கிறது தாங்க இந்த துபாய் மெட்ரோ ரயில்.

2009-கள்ல ஆரம்பிச்ச இந்த துபாய் மெட்ரோ கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல இடம் பிடிச்சிருக்கு. முழுதுமே கம்ப்யூட்டர் கண்ட்ரோல்ல 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு போற ஒரே ரயில் நெட்வொர்க் இது தான்.

துபாய் மெட்ரோவ ரெட்லைன் அப்புறம் கிரீன் லைன்-னு ரெண்டு ரூட்லபோற மாதிரி பிரிச்சிருக்காங்க.

இதுல கிரீன்லைன் வந்து கிரீக் (Creek) அப்டின்ற ஸ்டேசன்ல ஆரம்பிச்சு எடிசலாட்-ன்ற (Etisalat) ஸ்டேசன் வரைக்கும் போவுது.

ரெட்லைன் ஜெபல் அலி-ல (Jebel Ali) ஆரம்பிச்சு ரஷிதியா (Rashidhiya) வரைக்கும் போவுது.

இந்த ரெட்லைனும் கிரீன்லைனும் பர்துபாய் (Bur Dubai) அப்புறம் யூனியன் (Union) மெட்ரோ ஸ்டேசன்கள்ல சந்திச்சுக்கிது. இடம் மாறனும்னு நினைக்கிறவங்க இந்த ரெண்டு ஸ்டேசன்கள்லயும் இடம்மாறி பயணம் போய்க்கலாம். (எந்தெந்த இடங்களுக்கு போவுதுன்ற டீட்டெய்ல் கீழே இருக்கு!)

மெட்ரோ ரயில ஒவ்வொரு அஞ்சு நிமிசத்துக்கு ஒண்ணு-ன்ற கணக்குல சும்மாபோய்க்கிட்டே இருக்கு….… எத்தனை வுட்டாலும் கூட்டம் அள்ளுது. நைட்டு பண்ணெண்டு மணிக்கு கூட கூட்டமாத்தான் இருக்கு.



மெட்ரோ ரயில்ல டிரைவர் கிடையாது. எல்லாம் ஆட்டோமேட்டட். கம்ப்யூட்டரைஸ்டு கண்ட்ரோல் மூலமாத் தான் இயக்குறாங்க.

மெட்ரோ ரயில்கள் எல்லா ஸ்டேசன்லயும் 30 விநாடிகள் நின்னுட்டு போவும். ஸ்டேசன் வந்தோன தானியங்கி கதவுகள் ஒரே நேரத்தில் ரயில்லயும் ஸ்டேசன்லயும் தொறக்கும். அடுத்த 30 விநாடிகள்ல ரெண்டுமே ஒரே நேரத்துல மூடிரும்.

இதை ஆரம்பிச்ச முதல் வாரம் மட்டும் 3 லட்சம் பேர் பயணிச்சாங்களாம்.

ரயில் உள்ளாற எல்சிடி டிஸ்ப்ளே சிஸ்டம், டிவி அப்புறம் மைக் அறிவிப்பு (எல்லாமே ஆட்டோமேட்டட்) மூலமா அடுத்து வர்ற ஸ்டேசன் பேரு, கதவு தொறக்குறது, மூடுறது மாதிரி தகவல்-லாம் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

இந்த அறிவிப்புன்றது அரபிலயும் இங்கிலீஸ்லயும் மட்டும் தான். உதாரணம் பாத்தீங்கன்னா (அல் மகாத் அல் காதீம்ம ஹியா…. இதிஹாட் | தி நெக்ஸ்ட் ஸ்டேசன் இஸ்….யூனியன்) // (அல் அபுவா பூட்டு குலக் | டோர் இஸ் குளோசிங்) // (அல் அபுவா துஃப்தா | டோர் இஸ் ஓப்பனிங்) அவ்ளோ தாங்க…… பாருங்க அரபி நீங்களும் கொஞ்சம் கத்துக்கிட்டீங்க!

ரயில், பஸ் எல்லாம் குளோபல் பொசிசனிங் டிவைஸ் உள்ளது. பஸ்ல கூட அடுத்த இடம், அதுக்கு அடுத்த இடம்னு எல்லாம் டிஸ்ப்ளே ஆகிக்கிட்டே இருக்கும். குழப்பமில்லாம யாரோட துணையும் இல்லாம போக முடியும்.

தவிர மெட்ரோ வழித்தடம் பத்துன மேப் எல்லா இடங்களிலும் ஓட்டியிருக்கும். ஃப்ரீயாவும் ப்ரிண்ட் பண்ணி வச்சிருப்பாங்க. வேணும்னா ஒண்ணு லவட்டிக்கலாம்.

அவசர காலத்துக்கு கண்ட்ரோல் ரூமை காண்டாக்ட் பண்றதுக்கும் வழி பண்ணி வச்சிருக்காங்க. ஸ்டேசன்லயும் இருக்கும். ரயில்லயும் இருக்கும்.. அதுல நாம அவங்க கிட்ட பேசலாம். நம்ம டிரெய்ன்ல இருக்கற மாதிரி எமர்ஜன்சி ப்ரேக்கிங் சிஸ்டமும் இருக்கு. தப்பா யூஸ் பண்ணா 2000 திராம் போட்டு தாளிச்சிடுவாங்க! (ஒரு திராம்-ன்றது நம்மூரு காசுக்கு பதினாறு ரூவா சொச்சம் வரும்)

துபாய் மெட்ரோவையும் பஸ் சர்வீசஸ்-களையும்  ஆர்டிஏ-ன்ற ( Roads and Transport Authority) நிறுவனம் மூலமா இயக்குறாங்க.

இந்த ரெண்டுலயும் போறதுக்கு நோல் (Nol) அப்டின்ற காந்த அட்டை வேணும். இந்த நோல் காந்த அட்டை எல்லா மெட்ரோ ஸ்டேசன்லயும்., பஸ் ஸ்டேசன்லயும் கெடைக்கும். ஒரு அட்டையோட ஆரம்ப விலை 30 திராம்.

உங்க தேவைக்கேத்தா மாதிரி அதுல டாப் அப் பண்ணிக்கலாம். அதையும் அங்க இருக்கற ஏடிஎம் மாதிரி மெஷின்கள்ல செஞ்சுக்க முடியும். அந்த மிஷின்ல கார்டை வச்சு தேவையான பணத்தையும் அது உள்ள வுட்டா போதும். உடனே டாப் அப் ஆகிடும். இது வேலைக்காவாதுன்னா அங்க இருக்கற கவுண்டர்கள்ல பணத்தை நேராவே குடுத்தும் பண்ணிக்கலாம்.

3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணிக்க 1.80 திராம் செலவாகும். அது நீங்க பயணிக்கறதை பொறுத்து இந்த அமவுண்ட் மாறும்.
குறைந்த பட்சம் 1.80 அதிகபட்சம் 5.80 சார்ஜ் பண்ணுவாங்க. துபாய் மெட்ரோ தான் உலகத்துலேயே குறைந்த கட்டணமாம். ஆரம்பிச்சதுலேர்ந்து இன்னும் ரேட் ஏத்தலையாம்!

துபாய்ல நீங்க மெட்ரோ/பஸ்கள்ல போறதுக்கு ஒரு நாள்ல அதிகபட்சமா 15 திராம் தான் இந்த அட்டை மூலமா எடுத்துப்பாங்க.
அதுக்கு மேல நீங்க பயணம் போனாலும், அதுக்குண்டான பணம் டிஸ்ப்ளேல காமிக்கும். ஆனா பணம் எடுத்துக்க மாட்டாங்க.

 

ஸ்டேசன்கள்ல இந்த பயண அட்டைய காமிச்சோன்னா தொறக்கற மாதிரி பாதை இருக்கும். அங்கங்க துபாய் போலிசும் இருப்பாங்க. டிமிக்கி குடுக்க பாத்தீங்கன்னா பர்ஸ் பழுத்துரும். தவிர எல்லா இடத்துலயும் பாதுகாப்பு கேமரா வேற இருக்கும்.
துபாய் மெட்ரோ நைட்டு 12 மணி வரைக்கும் ஓடிக்கிட்டே இருக்குது.

எல்லா மெட்ரோ ஸ்டேசன், மெட்ரோ ரயில் ஃபுல்லா குளிர்சாதன வசதி பண்ணியிருக்காங்க. உட்கார சீட்டும் வசதியாவே இருக்கும். இது தவிர நிறைய பேரு நின்னுக்கிட்டும் போவலாம். என்ன ஒண்ணு,,, கைப்பிடி தான் போதுமான அளவு இல்ல. ப்ரேக் அடிச்சி நிக்கும் போதும் ஸ்டேசன்லேர்ந்து கெளம்பும் போதும் மட்டும் கொஞ்சம் ஜெர்க் ஆவும். மத்தபடி வடிவேல் மாதிரி ஸ்டெடியா நின்னுகிட்டே போவலாம்.

இந்த மெட்ரோ தற்போதைக்கு ரெட்லைன், கிரீன்லைன் மட்டும் தான் இருக்கு. பர்ப்பிள் லைன், ப்ளூ லைன், யெல்லோ லைன் இதெல்லாம் ப்ரப்போசல்ல இருக்கு. இது தவிர கிரீன்லைன் எக்ஸ்டென்சன் பண்ற ப்ளானும் இருக்காம்.

இந்த மெட்ரோ ட்ரெய்ன் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் போகும்.

எல்லா மெட்ரோ ஸ்டேசன்கள்லயும் அகலமா படிக்கட்டு, அப்புறம் நகரும் படிக்கட்டு (அதான்பா,  எஸ்கலேட்டரு), மின் தூக்கி (லிஃப்ட்) வசதி வேற செறப்பா இருக்கும்.

யூனியன், புர்ஜுமான் ஸ்டேசன்கள்ல இருக்கற மின் தூக்கிகள்ல நம்பர்களுக்கு பதிலா கிரீன்லைன், ரெட்லைன் அப்புறம் எக்சிட் என்பவற்றைக் குறிப்பதற்காக GL RL E அப்டின்னு போட்ருப்பாங்க. (நான் மொதல்ல பாத்துட்டு எதை அமுக்குனா எங்க போவும்னு தெரியாம குழம்பிட்டேன்!)

ஜெபல் அலி-லேர்ந்து புர்ஜுமான் வரை இந்த மெட்ரோ ரயில் தரைக்கு மேல இருக்கற பாலங்கள்லயும் மிச்சமிருக்கற எல்லா இடங்கள்லயும் சுரங்கப் பாதையிலயும் போவுது.

வெளியிலேர்ந்து பாத்தா எல்லா மெட்ரோ ஸ்டேசன்களும் (தனித்தன்மையோட கண்டுபிடிக்கறதுக்கு உதவியா) ஒரே மாதிரியான தோற்றத்தோட இருக்கும். (சில விதிவிலக்கும் இருக்கு) முக்கியமான ரோடுங்க வழியா போறதால ஒவ்வொரு ஸ்டேசனுக்கும் உள்ளே வர/ வெளியே போக நாலு பாதை இருக்கும் தப்பான எக்சிட் வழியா வெளியே போயிட்டீங்கன்னா திரும்ப வழி கண்டுபிடிச்சி போறதுக்குள்ள தாவு தீந்துரும்.


சில இடத்துல முக்கிய ஸ்தலங்களுக்குள்ளயே போற மாதிரி இந்த வழிகள் இருக்கும். உதாரணம் பாத்தீங்கன்னா துபாய் மால்!
மெட்ரோ ரயிலோட ஒரு பாதை உலகத்துலேயே பெரிய ஷாப்பிங் மாலான துபாய் மாலை இணைக்குது.

இது மாதிரி இடங்கள்ல நடக்கற தூரம் அதிகமா இருக்கும். உங்களுக்கு அந்த சிரமத்தையும் குறைக்கற விதமா அங்கங்க வாக்கலேட்டர்கள் இருக்கும். (இந்த எஸ்கலேட்டர் மேல கீழ போவுதுல்ல அதுமாதிரி இந்த் வாக்கலேட்டர் தரைலேயே நகர்ந்துக்கிட்டே இருக்கும்) அதுமேலே ஏறி நின்னா போதும். வேகமா போணும்னு நினைச்சா நாம அது மேலேயே நடக்கவும் செய்யலாம்.

மெட்ரோ ரயில்லயும் சரி, பஸ்கள்லயும் சரி. சாப்புடறதோ, காபி/கூல்டிரிங்ஸ் மாதிரி ஐட்டங்களை குடிக்கிறதோ தப்பு. மீறி செஞ்சிங்கன்னா ஃபைன் தான். அதே மாதிரி சிகரட் புடிக்கிறதும் தடை செஞ்சிருக்காங்கன்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மெட்ரோ ரயில்லயும் பஸ்கள்லயும் நம்ம ஊரு மாதிரியே லேடிஸ்/குழந்தைகளுக்கு தனி ஏரியா உண்டு. அதுலயும் இந்த பஸ்ல பாத்தீங்கன்னா ஒரு தடுப்பு கம்பி மூலமா இடத்தை பிரிச்சிருப்பாங்க. இந்த கோட்டை தாண்டி நீ வரக்கூடாது. நானும் வர மாட்டேன்ற மாதிரி... மீறி போனீங்கன்னா டிரைவரே கழுத்த புடிச்சி இந்த பக்கம் அனுப்பிருவாரு. லேடிஸ் ஏரியா காலியா இருந்து ஆம்பளைங்க ஏரியால இடமே இல்லைன்னா கூட விட மாட்டாய்ங்க.

துபாய் பஸ்கள்ல கண்டக்டர் கிடையாது. அதான் டிக்கெட்டே கிடையாதே? கார்டை மிஷின்ல தேய்க்கப் போறீங்க. ஒரு சில ரூட்கள்ல இந்த நோல் கார்டு செல்லாது. அங்கல்லாம் டிரைவர் கிட்டயே காசு குடுத்து டிக்கட் வாங்கிக்கணும்.

இந்த நோல் கார்டுல கோல்டு கார்டு வேற இருக்கு. அமவுண்ட் அப்டியே டபுள்! இது தவிர மாதாந்திர பயண அட்டை கூட உண்டு. வயசானவங்க, மாற்றுத் திறனாளிங்களுக்கு சலுகை வேற இருக்கு.

துபாய் பஸ்கள் எல்லாமே புதுசாவே மேனி கருக்குலையாம வச்சிருக்கானுங்க. எல்லாமே மெர்சிடிஸ் பென்ஸ், நியோப்ளான் கம்பெனி வண்டிங்க தான். அருமையான சஸ்பென்சனோட இருக்கும். அலுங்காம போவும். ஒரு சில டிரைவர்கள் கேவலமா ஓட்டுனா மட்டும் தான் அது மோசமான சவாரியா இருக்கும்.

நோல் காந்த அட்டையை ஏறும் போது ஒரு தடவையும் இறங்கறப்போ ஒரு தடவையும் அங்க இருக்கற டிவைஸ்ல தேய்க்கணும். அது நீங்க எங்க ஏறுனீங்களோ அந்த இடத்துலேர்ந்து இறங்குன இடம் வரைக்குமான இடம் வரைக்கும் உண்டான காசை உங்க கார்டுலேர்ந்து எடுத்துரும். ஒரு வேளை ஏறும்போது தேய்ச்சுட்டு இறங்கும் போது மறந்துட்டு இறங்கிட்டீங்கன்னாலோ அல்லது ஏறும்போது தேய்க்காம இறங்கும்போது தேய்ச்சுட்டு மறுபடியும் எப்போ எங்க ஏறுனீங்கனாலும் லம்பா ஒரு அமவுண்டை கறந்துட்டு தான் வுடும். பின்ன துபாய் ஷேக் எல்லாம் கேனயனா என்ன?

இந்நேரம் ஒரு சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கணுமே? இந்த காந்த அட்டையை ஏறும்போதும் தேய்க்காம இறங்கும்போதும் தேய்க்காம இறங்கிட்டா?

வந்திச்சா…………? என்னது வரலையா? (நீங்க தமிழ் தானே?)

உங்களை மாதிரி ஆளுங்களுக்காக துபாய் மாமா திடீர்னு பஸ்ல எங்கனயாச்சும் ஏறி செக் பண்ணுவார். அவர் கிட்ட இருக்கற ஒரு டிவைஸ்ல உங்க கார்டை தேய்ச்சி பாப்பார். அது சொல்லிரும். இந்த விளங்காதவன் ஏமாத்த பாக்குறான்னு. அப்புறமென்ன? துபாய் கவர்மெண்ட் கல்லாபெட்டிக்கு 2000 திராம் பார்சல்ல்ல்ல்ல்ல்..

இப்ப மறுபடி அடுத்த சந்தேகம் வந்திருக்கணுமே? ஒருவேளை என் கிட்ட அவ்ளோ பணம் இல்லைன்னா?

இல்லன்னா மாமா அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போய் விருந்து வச்சு கவனிச்சு அனுப்புவார். அப்புறமென்ன…. விருந்து மயக்கத்துலேர்ந்து நீங்க எந்திரிச்சு நடமாட கொஞ்ச நாள் ஆவும்.

உண்மைல உங்க எமிரேட்ஸ் ஐடி கார்டை வாங்கிருவாங்க. ஸ்டேசனுக்கு நீங்க நேர்ல போய் பணத்தை கட்டிட்டு தான் திரும்ப வாங்க முடியும். அந்த எமிரேட்ஸ் ஐடி இல்லாம நீங்க ஒண்ணும் பண்ண முடியாது. அதனால தான். நீங்க ஒருவேளை சுற்றுலாப் பயணியா இருந்தா உங்க கிட்ட எமிரேட்ஸ் ஐடி இருக்காது. அந்த சமயத்துல உங்க ஒரிஜினல் பாஸ்போர்ட்டை புடுங்கிப்பாங்க.


ரெட்லைன் வழித்தடங்கள்:
ஜெபல் அலி (JebelAli)

தனுபே (Danube)

எனர்ஜி (Energy)

இபன் பட்டூட்டா (Ibn Battuta)

நகீல் ஹார்பர் & டவர் (Nakheel Harbour & Tower)

ஜுமெய்ரா லேக்ஸ் டவர்ஸ் (Jumeirah Lakes Towers)

துபாய் மெரினா (Dubai Marina)

நகீல்(Nakheel)

துபாய் இன்டர்நெட் சிட்டி (Dubai Internet City)

ஷரஃப் டிஜி (SharafDG)

மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates)

ஃபர்ஸ்ட் கல்ஃப் பேங்க் (First Gulf Bank)

நூர் இஸ்லாமிக் பேங்க் (Noor Islamic Bank)

பிஸினஸ் பே(Business Bay)

புர்ஜ் கலிஃபா / துபாய் மால் (Burj Khalifa / Dubai Mall)

ஃபைனான்சியல் சென்டர்(Financial Centre)

எமிரேட்ஸ் டவர்ஸ்(Emirates Towers)

வேர்ல்ட் டிரேட் சென்டர் (World Trade Centre)

அல் ஜாஃபிலியா (AlJafiliya)

அல் கராமா (Al Karama)

புர்ஜுமான்(Burjuman)

யூனியன் (Union)

அல் ரிக்கா (Al Rigga)

தேரா சிட்டி சென்டர் (Deira City Centre)

ஜிஜிஐசிஓ (GGICO)

ஏர்போர்ட் டெர்மினல் 1 (Airport Terminal 1)

ஏர்போர்ட் டெர்மினல் 2 (Airport Terminal 2)

எமிரேட்ஸ்(Emirates)

ரஷிதியா(Rashidiya)


கிரீன்லைன் வழித்தடங்கள்:

கிரீக் (Creek)

அல் ஜாதல் (Al Jadal)

துபாய் ஹெல்த்கேர் சிட்டி (Dubai Healthcare City)

அவுத் மேத்தா (Oud Metha)

புர்ஜுமான்(Burjuman)

அல் ஃபஹிதி (Al Fahidi)

அல் குபைபா (Al Ghubaiba)

அல் ராஸ் (Al Ras)

பால்ம் தேரா (Palm Deira)

பனியாஸ் ஸ்கொயர் (Baniyas Square)

யூனியன் (Union)

சலாஹ் அல் தின் (SalahAl Din)

அபு பக்கர் அல் சித்திக் (AbuBaker Al Siddique)

அபு ஹெய்ல் (Abu Hail)

அல் கியாதா (Al Qiyadah)

ஸ்டேடியம்(Stadium)

அல் நாஹ்தா (Al Nahada)

துபாய் ஏர்போர்ட் ஃப்ரீ ஸோன் (Dubai Airport Free Zone)

அல் குசாய்ஸ் (Al Qusais)

எடிசலாட்(Etisalat)

இந்த துபாய் மெட்ரோ ரெட்லைன் ரூட்ல இருக்கற மெயினான ரோடு ஷேக் சாயித் ரோடு. (Sheikh Zayed Road)



 துபாய்ல இருக்கறநம்மூரு மவுண்ட் ரோடு தாங்க இந்த ஷேக் சாயித் ரோடு. ஆனா பாருங்க அது பத்து மவுண்ட் ரோடுங்களுக்கு சமம்.  ஏன்னு கேட்டீங்கன்னா இந்த பக்கம்7 லேன். அந்த பக்கம் 7 லேன்.அதையும் தாண்டி அழகான புல்வெளி. அதுக்கப்புறம்மெட்ரோ லைன். அதுக்கப்புறம் சர்வீஸ் லேன். அப்டின்னு அம்மாம்பெரிய ரோடு அது.

ரோட்டோட இந்த பக்கத்துலேர்ந்துஅந்த பக்கம் ஓடி கிராஸ் பண்ணனும்னு நீங்க நினைச்சு கூட பாக்க முடியாது. எல்லா லேன்லயும் சர்ர்…. சர்ர்னு கார்லாம் அதிவேகத்துலபோய்க்கிட்டிருக்கும். மணிக்கு 140 கிலோமீட்டர்அதிகபட்ச வேகம் அனுமதிக்கப்பட்டது. (குறைஞ்ச பட்சம்80 கிலோமீட்டராம்) நீங்க கார்ல போனீங்கனா போறதேதெரியாது. ஒரு ஸ்பீட் ப்ரேக்கர், ரோடுலஓட்டை, சிக்னல் எதுவும் இல்லை. அருமையாபோய்க்க்க்க்கிகிட்ட்டேடேஏஏ இருக்க வேண்டியது தான். அதும் சிட்டியதாண்டிட்டா இந்த ஸ்பீட் லிமிட்லாம் பாக்காம பறப்பானுங்க. 200 கிலோமீட்டர்லாம் சர்வ சாதாரணம்.

இந்த ரோட்ல தாங்கதுபாயோட அருமையான / அழகான இடங்களெல்லாம் இருக்கு.துபாய் மால், மால் ஆப் தி எமிரேட்ஸ், துபாய் மெரினா மால், இபன் பட்டூட்டா மால் மாதிரி பெரியபெரிய ஷாப்பிங் மால்கள் (நம்மூரு ஸ்கைவாக் / சிட்டி செண்டர்லாம் கம்பேர் பண்ணா பொட்டிக்கடை!) அப்புறம்,புர்ஜ் கலிஃபா

துபாய்ல ஒரு அருமையானவிஷயம் என்னன்னா இந்த டோல் பிளாசா தாங்க.

நம்மூரு மாதிரி மணிக்கணக்காடோல்பிளாசால காத்துக்கிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எல்லா கார்லயும்சாலிக் அப்டின்ற ஸ்டிக்கர் காரோட மேல் பாகத்துல ஒட்டியிருப்பாங்க. அதுல நீங்க பணம் டாப்அப் பண்ணி வச்சிருக்கணும். அவ்ளோதாங்க. இந்த சாலிக் டோல் ப்ளாசா சிஸ்டம் 2007- ல கொண்டுவந்தாங்களாம். இந்த சாலிக் 100 திராம் விலையுள்ளது. ஒரு தடவை டோல் ப்ளாசாவை கிராஸ் செய்ய 4 திராம் கழிச்சுப்பாங்க.

அதிவேக சாலைகள் எல்லாத்துலேயும் பாத்தீங்கண்ணா மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்துல கார்கள்போகும். வழியில டோல் ப்ளாசாக்கள் இருக்கும். அதில இருக்கர கேமரா இந்த சாலிக்கை ஸ்கேன் பண்ணி தேவையான பணத்தை எடுத்துக்கும்.நீங்க பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கலாம்.

தவிர ரோடெல்லாம்ரேடார் மூலமா கண்ட்ரோல் செய்யப்படுது. அந்த ரோட்ல என்ன வேகத்துல போகணுமோ அதுக்கு கீழயோ / மேலேயோ போனிங்கன்னாலும் சரி, வண்டி ஓட்டிக்கிட்டு செல்போன் பேசினிங்கனாலும் சரி அங்கங்க இருக்கற கேமரா பளிச்பளிச்னு போட்டோ எடுத்துரும். அப்புறம் ஃபைன் தான்….சங்கு தான்.

இந்த மெட்ரோவுக்கு சம்பந்தமில்லாத இன்னொரு மேட்டர் இது தான்.

ஒட்டுமொத்த எமிரேட்ஸ்ல நீங்க ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்.... இங்க கொசு சுத்தமா இல்லை!

நம்பித்தான் ஆகணும். கொசுவே கிடையாது. அவசரப் படாதீங்க. கொசுவுக்கு பதிலா அதோட சின்ன மச்சான் உறவுமுறையான மூட்டைப் பூச்சி (Bed bug) நீக்கமற நிறைஞ்சிருக்கு. மூட்டைப் பூச்சி இல்லாத ஏரியாவே இல்லை.

மூட்டைப்பூச்சி தனியா இருந்து கஷ்டப் படக்கூடாதேன்ற நல்ல எண்ணத்தோட இந்த உலகத்துல டைனசோர் காலத்துக்கு முன்னாடிலேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்கற கரப்பான் பூச்சி எக்கச்சக்கமா இருக்கு.

கரப்பானெல்லாம் சின்ன சின்ன சைஸ்லேர்ந்து பெரிய சைஸ் வரை தாராளமா இருக்கு.

கொஞ்சம் இருங்க.... கொசு இல்லைன்னா சொன்னேன்?

ஆக்சுவலா கொசு இருக்கு..... ஆனா இல்லை. ஆமாங்க. நான் கொசுவை அங்க பாக்கவேயில்லை.

இந்த மூட்டைப்பூச்சி மேட்டர் மாதிரி இன்னும் நிறைய தகவல்கள் இருக்கு. ஆனா உங்க ஆர்வத்தை பொறுத்து தான் எழுதலாம்னு நினைக்கிறேன்.

கமெண்ட் பண்ணுங்க!